தமிழரசன்

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் பாபு யோகஸ்வரன் கூறியதாவது: “இந்தப் படம் சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். இது பக்கா கமர்சியல் படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here