25வது படத்தை ஓடிடியில் வெளியிடும் நானி

நான் ஈ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நானி. இவர் நடிப்பில் தற்போது ‘வி’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானியுடன் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இது நானி நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். இதில் அவர் முதன்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். கொரோனா வைரஸ் காரணமாக இப்படம் திட்டமிட்டபடி தியேட்டரில் வெளியாகவில்லை. இதனால் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.

தனது 25-வது படம் ஓடிடியில் வெளியாவது குறித்து நானி, “கடந்த 12 ஆண்டுகளாக எனது படங்களைக் காண டிக்கெட்கள் எடுத்து திரையரங்கிற்கு வந்தீர்கள். இப்போது நான் உங்களுடைய வீட்டிற்கே வந்து நன்றி கூறவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here