ஐந்து என்ற எண்ணுக்கு சிறப்பூட்டும் ஆலயம்

விழுப்புரம் அருகே உள்ள விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தற்போதைய விருத்தாசலம் முன்பு, திருமுதுகுன்றம் என்று அழைக்கப்பட்டது. அம்பாளில் திருநாமம் விருத்தாம்பிகை என்பதாகும். இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், ‘ஆழத்து பிள்ளையார்’ என்று வணங்கப்படுகிறார்.

இந்த தலத்திற்கு ‘விருத்தகாசி’ என்ற பெயரும் உண்டு. முன் காலத்தில் இந்த ஆலயம் காசியை விட சிறப்பு மிக்க தலமாக விளங்கியதாக கூறப்படுகிறது. ஐந்து என்ற எண்ணுக்கு சிறப்பூட்டும் வகையில் இந்த ஆலயம் விளங்குகிறது. 5 கோபுரங்கள், 5 கொடி மரங்கள், 5 நந்திகள், 5 தீர்த்தங்கள், 5 லிங்கங்கள், பஞ்சதீப வழிபாடு, 5 தேர்கள், 5 உள் மண்டபங்கள், 5 வெளி மண்டபங்கள் என்று இங்கு ஐந்தாக அமைந்தவை ஏராளம். இந்த ஆலயத்தில் முருகப்பெருமான், சைவ ஆகமங்கள் 28-ஐ கொண்டு லிங்கம் அமைத்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கின்றன.

பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வழிபட முடியாதவர்கள், இங்குள்ள பஞ்ச லிங்கத்தை வழிபட்டால் வேண்டிய பலன் கிடைக்கும். இங்குள்ள ஆழத்து பிள்ளையார், ஆழமான பகுதியில் இருக்கிறார். இதனுள் இறங்குவதற்கு படிக்கட்டுகளும், உள்ளே தனிச் சுற்றுப்பாதையும் கோபுரமும் உள்ளன. விநாயகரின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது தலம் என்ற சிறப்பு பெற்றது இந்த ஆலயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here