சிவசேனாவுக்கு சவால் விட்ட பிரபல நடிகை

வரும் புதன்கிழமை மும்பைக்கு வருகிறேன், முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று சிவசேனா கட்சியினருக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மனதில் பட்ட கருத்தை தைரியமாக சொல்பவர். சுஷாந்த் சிங் மரணம் குறித்து பாலிவுட்டில் யாரும் வாய் திறக்காத நிலையில், அவர் தொடர்ந்து கருத்துகளை கூறிவருகிறார். பாலிவுட்டின் மிகப்பெரிய புள்ளிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்.

இந்நிலையில் இவர் மும்பை நகரம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாக அண்மையில் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார் . அவரது இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , அச்சமாக இருந்தால் மும்பை மாநகரத்திற்கு வரவேண்டாம் என்றும் , மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறியிருந்தார் .

இந்நிலையில் , ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு , சஞ்சய் ராவத்துக்கு பதில் அளித்திருக்கும் கங்கனா ரனாவத் , சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும் , வரும் 9 ஆம் தேதி மும்பைக்கு நிச்சயம் வரப் போவதாகவும் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார் . தற்போது கங்கனா ரனாவத் அவரது சொந்தா மாநிலமாந இமாச்சல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here