பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார். அவருக்கு வயது 42. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி திடீரென மரணமடைந்தார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலக்க போறது யாரு, அது இது எது போன்ற சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த வடிவேல் பாலாஜி, ‘கோலமாவு கோகிலா’ உள்பட ஒருசில திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.