எந்திரன் படக்கதை தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ் நாடன் தொடுத்த வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்ததை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் மேல்முறையீடு செய்துள்ளார்.