டிரவுசர் போட்டால் கால் தெரியுது என்று நெட்டிசன்கள் கதறுகின்றனர். ஆனால் நம் பாரம்பரிய உடையான சேலை அணிந்தால் வயிறு தெரியாதா என்று கேட்கிறார் பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி.
சமீபத்தில் பிரபல மலையாள நடிகையான அனஷ்வரா ராஜன் தன்னுடைய பேஸ்புக்கில் குட்டை டிரவுசர் அணிந்து அணிந்து சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இந்தப் படங்கள் வெளியானதும் தான் தாமதம், நெட்டிசன்கள் அவரை கடித்து குதறி விட்டனர். இவ்வளவு கவர்ச்சியான புகைப்படங்களை எப்படி வெளியிடலாம் என்று கூறி அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அனஷ்வராவுக்கு ஆதரவாக பல மலையாள நடிகைகள் களத்தில் குதித்தனர். நடிகைகள் ரீமா கல்லிங்கல், அஹானா கிருஷ்ணா உள்பட பல நடிகைகள் தங்களுக்கும் கால்கள் இருக்கிறது என்று கூறி நீச்சல் உடை மற்றும் டிரசவுசர் அணிந்த போட்டோக்களை வெளியிட்டனர்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகையும், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ நாயகியுமான அபர்ணா பாலமுரளி, அனஷ்வராவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஒருவர் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவருக்கு உள்ள சுதந்திரமாகும். ஒருவருக்கு எந்த உடை பொருந்துகிறதோ அந்த உடையை அவர்கள் அணிவதில் என்ன தவறு இருக்கிறது? மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
டிரவுசர் அணிந்தால் கால் தெரியும் என்பது உண்மைதான். ஆனால் நம் நாட்டு பாரம்பரிய உடையான சேலை அணிந்தால் வயிறு தெரியுமே. இது குறித்தெல்லாம் யோசனை செய்வதற்கு இவர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என தெரியவில்லை. உங்களுக்கு பிடித்த, உங்களுக்கு பொருந்துகின்ற உடை எதுவோ அதை அணியுங்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கவலைப்பட தேவையில்லை.
நாமெல்லாம் மனிதர்கள் தான். யாரும் பெர்பெக்ட் அல்ல. பொது சமூகத்தில் அனைவருக்கும் தெரிந்தவர் என்பதால் அவர்கள் குறித்து என்ன வேண்டுமானாலும் குறை சொல்லலாம் என கருதக்கூடாது. அதற்கு யாருக்கும் உரிமை இல்லை. என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் கமெண்டுகளை நான் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன். நாம் எவ்வளவு நல்ல கருத்துக்களை பகிர்ந்தாலும் அதற்கு மிக மோசமான கமெண்ட்டுகளை பதிவிடுகின்றனர். அது நம்மை மனதளவில் பாதிக்கும். எனவே தான் நான் கமெண்டுகளை கட்டுபடுத்தி வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.