கோடை விடுமுறைக்கு ‘மஹா!’

ஹன்சிகா மோத்வானி கதை நாயகியாக நடித்துள்ள, மஹா படத்தின் வேலைகள் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. யு.ஆர்.ஜமீல் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

முக்கிய கேரக்டர்களில் சிம்பு, ஸ்ரீகாந்த் நடித்துள்ளனர். படம் குறித்து ஹன்சிகா கூறியதாவது:கடந்த, 2020ம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாகவும், நோயின் தாக்கத்தில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்வதிலுமே கடந்து போனது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வலியில் இருந்து மீண்டுவர, இறைவனை பிரார்த்திக்கிறேன்.மேலும், கொரோனா முன்களப்பணியாளர்களை, இத்தருணத்தில் வணங்குகிறேன்.

பல தடைகளை தாண்டி, மஹா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது மகிழ்ச்சியான விஷயம். வரும் கோடை காலத்தில், படத்தை வெளியிட ஆவலாக இருக்கிறோம். இதில் நடிக்க சம்மதித்த சிம்புவுக்கு நன்றி. அவரது பகுதியை ரசிகர்கள் கொண்டாடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here