பகத்தின் அழுக்கு முகத்தில் தெரியுமே!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயகிருபா. இவரது வீட்டில் கடந்த 10- ஆம் தேதி  திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் 4 பேர் வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த ஜெபகிருபாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டிப்போட்ட அந்த கும்பல். ஜெயகிருபா கழுத்தில் அணிந்திருந்த நகைகள் , பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 35 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பாதிக்கப்பட்டவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி  விசாரணையை தொடங்கினர். அதில் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் கொள்ளை நடந்த இடத்தைச் சுற்றி சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்ததைக் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர் மூலமாக அருண்பாண்டியன் என்ற இளைஞனைக் கைது செய்தனர். விசாரித்த போது, இந்த கொள்ளைச்சம்பவத்துக்கு தலைவராக ஒரு பெண் ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜெயகிருபாவின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது தோழியான முத்துச்செல்வி என்பவர் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூலையாய் செயல்பட்டது வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

பணத்தேவையால் முத்துச்செல்வி தவித்துக் கொண்டிருந்தபோது, தான் அடகு வைத்த நகைகளை மீட்டு வந்ததை ஜெயகிருபா அவரிடம் பெருமையாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த நகைகளை எப்படியாவது கொள்ளையடித்துவிட வேண்டும் என்று முத்துலட்சுமிக்கு யோசனை வந்துள்ளது. உடனே 4 நண்பர்களான அருண்பாண்டியன், கணேஷ்குமார், சோலைச்சாமி, ஹரிஹரன் ஆகியோரை கொள்ளைத் திட்டத்திற்குக் கூட்டுச்சேர்த்தார்.

முத்துச்செல்வியையும் 4 இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். கொள்ளையடித்த நகைகளையும், கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here