ஜோகூர் கடற்பகுதியில் சட்டவிரோதமாக நங்கூரமிட்ட கப்பல் தடுத்து வைப்பு

கோத்தா திங்கி:

கிழக்கு ஜோகூர் கடற்பகுதியில் சட்டவிரோதமாக நங்கூரமிட்ட குற்றச்சாட்டில் பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்றை மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர்.

தஞ்சோங் பெனாவாரிலிருந்து கிழக்கே 15.8 கடல் மைல் (29.2km) தொலைவில் நேற்று (நவம்பர் 27) காலை 11 மணியளவில் கப்பல் கைப்பற்றப்பட்டது என்று MMEA தஞ்சுங் செடிலி மண்டல பதில் இயக்குநர் கடல்சார் கமாண்டர் முகமட் நஜிப் சாம் கூறினார்.

“கப்பலில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, மலேசியக் கடற்பரப்பில் நங்கூரமிட அனுமதி பெறப்பட்டதற்கான எந்த ஆவணத்தையும் அந்தக் கப்பலின் கேப்டன் வழங்கத் தவறியதாக,” அவர் இன்று (நவம்பர் 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

கப்பலில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 21 முதல் 58 வயதுக்குட்பட்ட 17 பணியாளர்கள் இருந்ததாக அவர் சொன்னார்.

சட்டவிரோதமாக நங்கூரமிட்டதற்காக வணிகக் கப்பல் கட்டளைச் சட்டம் 1952 இன் பிரிவு 491B(1)(L) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக RM100,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

“கப்பல் கேப்டன்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எப்போதும் விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறோம். மேலும் சட்டத்திற்கு இணங்கத் தவறியவர்கள் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முகமட் நஜிப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here