சுக்கிர மேடு சரியாக இருந்தால் பணவரவு சீராக இருக்கும்

வீட்டில் நாம் செய்யும் சில தவறுகள் நம்முடைய ஜாதகத்தையும் பாதிக்கிறது. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் அடுத்து வரும் பலன்களும் அமையப் பெறுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் முன்னோர்கள் சொன்ன எதையுமே யாரும் பின்பற்றுவது கிடையாது. சுக்கிர பலம் இருந்தால் தான் வசதி வாய்ப்புகள் ஒருவருக்கு கிடைக்கப் பெறும். சுக்கிர பலத்தை எப்படி வலுவாக்கி கொள்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒருவருடைய கைரேகையில் சுக்கிர மேடு என்பது சீராக அமைந்திருக்க வேண்டும். இதற்கு சரியான தூக்கமும், நிம்மதியான மனநிலையும் இருப்பது அவசியமாகும். ஆனால் எவ்வளவு பேருக்கு இந்த இரண்டும் உள்ளன? உங்களில் எத்தனை பேர் நிம்மதியான தூக்கத்தையும், தெளிவான மனநிலையையும் கொண்டு இருக்கிறீர்கள்? எப்போதும் கைகளில் நவீன ரக உபகரணங்களை வைத்துக் கொண்டு தூக்கத்தை தொலைத்து கொண்டிருக்கிறோம்.

தூக்கம் தொலையும் பொழுது உடல் உஷ்ணம் அடைகிறது. இந்த உஷ்ணத்தினால் சுக்கிர மேடு பாதிக்கப்படுகிறது. சுக்கிர மேடு பாதிப்படையும் பொழுது இயல்பாகவே நம்முடைய பணவரவும் தடைபடுகிறது என்பது தான் உண்மை.

மனமும், உடலும் சீராக இருக்கும் பொழுது, சிந்தனையும் தெளிவாக இருக்கும். தெளிவான சிந்தனையின் மூலம் நாம் செய்யக் கூடிய எந்த ஒரு விஷயமும் வெற்றி அடையும் பொழுது, அங்கு பணவரவிற்கு தடை இருக்காது. சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் இதனுடைய உள்ளர்த்தம் உங்களுக்கே புரியும்.

சுக்கிரனுக்கு அதிபதியாக இருப்பவள் மகாலட்சுமி தேவி ஆவார். மகாலட்சுமிக்கும், சுக்கிரனுக்கும் உகந்தது மல்லிகைப்பூ. ஆகவே ஒவ்வொருவரின் வீட்டிலும் கட்டாயம் மல்லிகைப்பூவின் மணம் வீசிக் கொண்டிருப்பது சுக்கிர பலத்தை அதிகரிக்க செய்யும். மலர்களில் மல்லிகை என்பது விசேஷமானது ஆகும். மல்லிகை மலரை எந்த தெய்வத்திற்கும் நீங்கள் அணிவிக்கலாம்.

குறிப்பாக மகாலட்சுமி தேவிக்கு மல்லிகை மாலை சூட்டி, மங்களகரமான மாவிலைத் தோரணம் வீட்டின் தலை வாசலில் கட்டி பூஜைகள் செய்து வந்தால் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது. உடலை எப்போதும் உஷ்ணமாக வைத்திருந்தால் கைகளில் இருக்கும் சுக்கிர மேடு தீவிரமாக பலவீனமடையும்.

சுக்கிர மேடு என்பது உங்களுடைய வலது கையின் கட்டை விரலுக்கு கீழே அமைந்திருக்கும் கோடுகள் ஆகும். இந்த கோடுகள் வலுவாகும் பொழுது, உங்களுடைய வாழ்க்கையின் தரமும் உயர்கிறது.

இதற்கு நிம்மதியான தூக்கம் அவசியம். உடல் உஷ்ணம் பெறாமல் இருக்க அடிக்கடி தண்ணீரை அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் தூங்குவதற்கு முன்னர் செல்போன், டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டு அமைதியாக தியானத்தில் ஈடுபட வேண்டும். 10 நிமிடம் தியானம் செய்தாலே சட்டென கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கமும் வந்துவிடும். ஆனால் அதை யாரும் சரியாக கடைபிடிப்பது இல்லை.

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகளை முந்தைய நாள் இரவில் பித்தளை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். மறுநாள் அதனை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, உடல் குளிர்ச்சி பெறும். இது வாரம் ஒரு முறை செய்து வர சுக்கிர மேடு பலமாகும்.

மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொண்டே இருக்காமல், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற தெளிவான முடிவை தீர்க்கமாக எடுக்க வேண்டும். இப்படி உங்களை நீங்களே உடலளவிலும், மனதளவிலும் வலிமையாக மாற்றிக் கொள்ளும் பொழுது சுக்கிர மேடு பலமடைந்து வாழ்வில் செல்வமும் அதிகரிக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here