தமிழ்விருந்து தினம் அருந்து

 

 

குரள்வழி  யாவும் குறள்வழி யாக

குழந்தாய் நீ பேசு!- தமிழ்க்

குரலே நீதான் குறள்தான் தந்தை

குலம்வா ழட்டும் செழிப்போடு!

 

அமுதே தமிழ்தான் அஃதே உயிராம்,

அன்னை அவள்மூச்சு!- மலர்க்

குமுதம் போலும் கைகூப் பிடுவாய்

குணமாய்  தினம்போற்று!

வெல்லும் தமிழே வேலன் சூலம்,

வெல்லும்படி பேசு! – தமிழ்

உள்ளும் உன்னுள்  உயர்ம ருந்தாகும்

உணர்வே நினைப்போடு!

 

உன்னை என்னை பெற்றவள் அன்னை,

உணர்ந்தே தமிழ்ப்பேசு!-  தாய்,

முன்னவள் என்றே  முதல்வணங் கிடுவாய்

முதன்மைப் பண்போடு!

 

தமிழை அருந்து தமிழே விருந்து

தமிழே மருந்தாகும்!- தினம்

தமிழ்தான் அனைத்தும் தகையாய் உயர்த்தும்

தமிழின் புகழ்பேசும்!

வீர.கா. அருண்மொழித்தேவன்

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here