பெயரே இவருக்குப் பெருமை

பெஞ்ச் பெரியசாமியின் அலசல்

பேச்சே இவரின் ஆளுமை

ஒரு மனிதனின் முன்னேற்றம் என்பது இன்றுவரை பணத்தின் மதிப்பாகத்தான் கருதப்படுகிறது. இதை பலர் மறுத்துக்கூறலாம். ஆனாலும் எப்படிச்சுற்றி வந்து நின்றாலும் பணம்தான் இறுதியில்  மனிதனை ஆளும் சக்தியாக மாற்றமடைகிறது. அதை வைத்துதான் எடை போடும்படியாகவும் அமைந்துவிடுகிறது.

பணமும் சேர்ந்து, நல்ல பண்பும் குணமும் இருந்தால் அந்த மனிதன் மகான் ஆகிவிடுகிறான். அனைத்தும் இழந்தவர்கள் , அல்லது துறந்தவர்கள் மட்டுமே மகான்கள் அல்லர். பணம் படைந்தவர்களும் இருக்கிறார்கள்.  அப்படி இருக்கிறார்கள் எனபதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். 

மக்களால் பணம் கிடைக்கும் வழி அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அது சிறந்த தொழிலாகவும் அமைந்திருக்கிறது அல்லது அமையப்பெற்ரிருக்கின்றனர். அந்தப்பணம் மீண்டும் மக்களுக்கே போய்ச் சேரவேண்டும் என்ற தாரக  மந்திரம் அறிந்தவர்கள் மட்டுமே போற்றப்படுகின்றவர்களாக இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் மகான்கள் என்றால் மறுப்பதிற்கில்லை. 

கடலில் சேரும் நீரை கடலே தக்க வைத்துக்கொள்வதில்லை என்பதுபோல இருவழியாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்தவர்களுக்கு நட்டம் நெருங்குவதில்லை.

அப்படி நினைக்கின்றவர்களும் காரியங்கள் ஆற்றுகின்றவர்களும் கடவுளின் பிரதிநிதிகள் என்று சொலவதிலும் தவறில்லை. ஏனென்றால் கடவுள் நேரில் வருவதில்லை. மனித உருவில் யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கைதான் இன்னும் நம்மிடம் இருக்கிறது . 

 

என்னுடைய சொத்தில் பாதியை தொண்டூழியப் பணிகளுக்குத் தருவேன் என்று கூஊரியிருக்கும் பெர்ஜெயா கார்ப்பரேஷன் குழும நிர்வாகத்தலைவர்  டான்செரி வின்சென்ட் தான் என்பவர் கண்ணில் படுகின்றவராக இருக்கின்றார்.

பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் அறிவித்திருக்கும் வசதி குறைந்தவர்களுக்கான வீட்டுடமைத்திட்டம் அலாதியானது.

சாதாரண மக்களும் வசதியான, ஏற்புடைய வீடுகளில் வாழவேண்டும் என்ற இவரின் எண்ணமே இவரை உயர்ந்த மனிதராக மதிப்பிடச் செய்கிறது. 

குடியிருக்கக் கூடு அவசியம். அந்த கூடு ஏற்புடைய, அடிப்படைத்தகுதிகளுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு. இதைத் தர்மச் சிந்தனை என்று கூறினாலும் மக்களால் சம்பாதிக்கும் பணம் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான்

 

 அவருடைய  ஆசையாக இருக்கிறது.

இவர்களைப் போன்றவர்கள் கூட்டுமுறையில் முன்வந்தால் ஏழைகளும் ஏற்புடைய, வாங்கும் தகுதியுள்ள வீடுகளைப் பெறமுடியும். 

இவரைப்போன்ற வசதியுள்ளவர்கள் மக்கள் மீது பார்வையைச் செலுத்தினால் இறைவனின் பார்வை இவர்கள் மீது நிச்சயம் விழும்.

இவர் மலேசிய , உலக் மக்களின் நனம்திப்பபெற்று விளங்க இவரின் முற்போக்கான எண்ணமே காரணமாக இருக்கிறது. 

நாட்டின் மீது நம்பிக்கைக்கொண்டிருக்கும் இவர், மக்களின் காவலர் என்றால் மரியாதையுடன் ஏற்கத்தானே வேண்டும்.

ஒவ்வொரு காசும் உழைப்பினால் வந்தது . அதனால் அவர் வெற்றிபெற்றிருக்கிறார்.  அவர் win cent  ஆகியிருப்பாரோ. பெயரே அவரின்  பலம்.

-கா. இளமணி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here