நடிகர் விவேக் காலமானார்

சென்னை:  மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலை 5 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடிகர் விவேக் அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டார். ஆனால் அவருடைய இறப்பிற்கு தடுப்பூசி காரணம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். வெள்ளிக்கிழமை காலையில் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here