மதிக்கபட வேண்டிவர்கள் முன் களப்பணியாளர்கள்

தீயணைப்பு வீரர்கள் மரியாதைக்குரியவர்கள்

மலேசியாவில் பெருநாள் காலங்கள் மிகுந்த அமர்க்களமானவை. ஆனாலும் அந்த மகிழ்ச்சிகரமான நாட்களை குடும்பத்தோடு அனுபவிக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்.

கோவிட் -19 மக்களை வெகுவாகவே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மக்களை அதன் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் முன்களப்பணியாளர்கள் சோர்வின்றி இருக்க வேண்டும். இவர்களைப் போன்று பிற துறைகளும் ஏராளமக இருக்கின்றன, அதில் மருத்துவம், காவல்துறை, தீயணைப்பு  ஆகியவை முக்கியமானவை,

இவர்களின் வேலை மக்களை காப்பது மட்டுமல்ல, மக்களோடு அவர்களும் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டும். இதற்கும் மேலாக பொதுச்சொத்துகளைக் காக்கும் பொறுப்புள்ளவர்களாக தீயணைப்புத்துறை  கூடுதல் விழுக்காட்டை எடுத்துக்கொள்கிறது.

தீயணப்புத் துறையின் பங்கு மருத்துவத்துறையை விட முக்கியமானது என்று சொன்னாலும் தகும்.

தீயினால் ஏற்படும் பேரழிவுகள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடுக்கின்றன. தீ ஏற்படுவதற்கான காரணங்களுக்குப் பஞ்சமே இல்லை. 

நீர் நிலம் நெருப்பு என்ற மூன்று தளங்களிலும் தீயணப்பாளர்களின் துணை இல்லாமல் பாதுகாப்பை நிலை நாட்டவே முடியாது.

தீ சம்பவம் ஏற்படும்போது பலருக்கும் அது பாதகமாகிவிடுகிறது. அதனால் தீ நெருங்காமல் இருக்க  பாதுகாப்பு  என்பது  அனைத்து கோணத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும். அடுப்பங்கரையிலிருந்து மின் சாதனம் வரை பாதுகாப்பு இருப்பதை உறுதிப்படுதிக்கொண்டு பயன்படுத்த  வேண்டும்.

அதனால் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டால் விபத்தைத் தவிர்த்துவிடலாம். குறிப்பாக விழாக்காலங்களில்தான் அதிக தீவிபத்து ஏற்படுவதாக விவரங்கள்   காட்டுகின்றன.

இதற்கு அனுபவ மின்மை ஒரு காரணம்.  சக்திமிக்க மின்சார சாதனங்களைப் பயன்படுத்தாமல்  தரமற்ற சாதங்களுக்கு அதிக  வேலை கொடுப்பதும் காரணமாகிவிடும்.

பெரும்பாலும் சமையலறைகளில் தீ தொடர்பான விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அதனால் வீட்டிற்கான தீயணைப்பு கருவிகள் இருந்தால் தீ ஆபத்தைத் தவிர்த்திவிடலாம் .

பெரும்பாலான வீடுகளில் தீயணைப்பு கருவிகள் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. அது பற்றிய அக்கறையும் இல்லாமல் தான் இருக்கிறார்கள். வருவது வரட்டும், வந்தபின் பார்ப்போம் என்ற கொள்கையெல்லாம் சரியாக இருக்காது.

சமையற்கூடங்களில் பயன்படுத்தப்படும்  சாதனங்களுக்கு கால வரையறையும் பராமரிக்கும் முறைகளும் இருக்கின்றன. பராமரிப்பு முறைகள் சரியாக அனுசரிக்கப்படவில்லையானால் அதன் இயங்கு தன்மையில் பாதிப்பும் தேய்மான சிதைவுகளும்  ஏற்படும். இவற்றையெல்லாம் தொடர் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

விழாக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிகமான பயன்பாடெ காரணமாக இருக்கும். விழாக்காலங்களில்தான் தீ சமபவங்களும் அதிகமாக இருக்கும். ஆதலால் ஒவ்வொரு வீட்டிலும் தீயணைப்பு சாதனம் இருந்தால் தைரியமாக இருக்கும். 

 பெருநாள் காலங்களில் அனைவரும் பெருநாள் மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஆனால் முன்களப்பணியாளர்கள் பலருக்கு விடுமுறை என்பது கேள்விப்படுவதாகவே இருக்கும். 

நாடு முழுவதும் 322 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் 9000  தீயணைப்பு வீர்ர்களில் 20 விழுக்காட்டினர்  மட்டுமே  விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். மற்றவர்கள் பாதுகாப்புக்காக தயார் நிலையில் இருப்பர்.

மேலும், பணியில் இருக்கின்றவர்கள் பாதுகாப்புக்காக பெருநாள் விடுமுறை எடுக்கமுடியாவிட்டாலும் அவர்களை மனத்தில் இறுத்தி பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வதே அவர்களுக்குக் கொடுக்கும் பெருநாள் மரியாதையாக இருக்கும். 

மழை , வெள்ளம், நிலச்சரிவு, நெருப்பு  என்றாலும் அவர்களின் பணி மிக முக்கியமானது என்பதை அறியாதவர்கள் இல்லை. 

ஆகையால், வருமுன் யோசித்தால் வருத்தத்தை ஒதுக்கிவிடலாம்!

 -கா.இளமணி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here