கவலையில்- சிங்கை பிரதமர் லீ
சிங்கப்பூர்-
சிங்கப்பூரில் கடந்த 2 வாரங்களில் உருவான புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள், தொடர்பு கண்டறியப்படாத சம்பவங்களும் கவலையளிப்பதாகப் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பரவுவதைத் தடுக்க அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மே 16, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஜூன் 13 வரை இருக்கும்.
கோவிட்-19 தொற்று சந்தேகிக்கப்பட்ட இந்திய ஊழியர், சொந்த நாட்டுக்குச் செல்ல விமான நிலையத்தில் சுற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
தொற்று பரவுதலை அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளும் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
முடிந்தவரை தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே செல்லுங்கள், அரசாங்கம் வகுத்துள்ள ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.
பொது இடத்திற்கு சென்றால் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்..