இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த இறுதிக்கட்ட போரின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலங்கை இராணுவம் முற்றுகையிட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முளள்ளிவாய்க்கால் நினைவு தினமாக மே 18 நினைவுகூறப்படுகிறது .
ஆனால் இந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே தமதுஅஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள் என்று தமிழ் உணர்வாளரும் சமூக நல சேவையாளருமான கனகசபை விமலாதாஸ் தெரிவித்தார்.
இந்த இறுதி யுத்தத்தின் போது தனது அக்கா, மாமா அவரது இரு பிள்ளைகள் என அனைவரையும் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.