வதந்திகளை நம்பாதீர்; கிள்ளான் லிட்டில் இந்தியாவில் வர்த்தகம் வழக்கம்போல் செயல்படுகிறது

கிள்ளான் லிட்டில் இந்தியாவில் வர்த்தகம் வழக்கம் போல் இயங்குகிறது என்று வர்த்தகள் தெளிவுப்படுத்தினர். கோவிட் தொற்று காலகட்டத்தில் நாங்கள் சொல்லாணா துயரங்களை எதிர் நோக்கி வரும் வீண் வதந்திகளை பரப்பி எங்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கடந்தாண்டு கோவிட் தொற்று ஆரம்பித்ததில் இருந்து நாங்கள் வியாபாரத்தை இழந்தோம். வியாபாரம் குறைவாக இருந்தாலும் கடை வாடகை, பணியாளர்களின் உணவு, தங்குமிட வசதிகள் ஆகியவற்றிக்கான செலவினைகள் எப்பொழுதும் போலவே இருந்து வருகிறது.

இந்நிலையில் எஸ்ஓபியை கடைபிடித்து வியாபாரம் செய்யலாம் என்ற அரசாங்கத்தின் அனுமதி எங்களுக்கு சற்று நிம்மதி பெருமூச்சை வரவழைத்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு கிள்ளான் லிட்டில் இந்தியாவில் அதிகமானோருக்கு கோவிட் தொற்று இருப்பதாகவும் அதனால் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்ற வைரல் செய்தி எங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அதனால் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று வர்த்தகர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here