கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கு UNHCR அட்டைதாரர்களின் பட்டியலை அரசு கோருகின்றது.

புத்ராஜெயா (ஜூன் 13) : ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (UNHCR) அட்டைதாரர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வசிப்பிடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு, அவர்களை தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள சுமார் 180,000 க்கு மேற்பட்ட UNHCR அட்டைதாரர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி திட்டத்திற்கு பொறுப்பானவர்களுடன் தாம் பணியாற்றுவதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார்.

“UNHCR அட்டைதாரர்கள் யார் மற்றும் அவர்களின் குடியேற்றங்கள் எங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த இது உதவும் என்று” என்று சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

மேலும் UNHCR அட்டைதாரர்களின் பட்டியலை UNHCR நிறுவனத்திடமிருந்து பெறுவதற்க்கு அரசு சாரா நிறுவனங்கள் (NGOs)அரசாங்கத்திற்கு உதவும் என்று தான் நம்புவதாகவும் ஹம்சா கூறினார்.

தாம் UNHCR இடம் அவர்களது பட்டியலைக் கோரிய போதிலும் இன்னும் எந்த தரவையும் பெறவில்லை என்று அவர் கூறினார்.

நாட்டில் தற்போது 178, 715 UNHCR அட்டைதாரர்கள் இருப்பதாக உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல்வேறு ஆவணங்களுடன் நாட்டில் சுமார் 2.5 மில்லியன் வெளிநாட்டினருக்கும், UNHCR போன்ற மூன்றாம் தரப்பினருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் ஹம்சா கூறினார்.

மேலும் “சிறைத்தண்டனை அனுபவிக்கும் வெளிநாட்டினர் மற்றும் குடிவரவு டிப்போக்களில் உள்ளவர்களும் இதில் அடங்குவர்” என்று அவர் கூறினார்.

UNHCR அட்டைதாரர்களைத் தவிர, தடுப்பூசி போடப்படும் வெளிநாட்டவர்களில் நிரந்தர குடியிருப்பாளர்கள் (268, 419), தற்காலிக குடியிருப்பாளர்கள் (8, 801), நுழைவு அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் (22, 581), மாணவர்கள் (36, 559) மற்றும் பணி அனுமதி வைத்திருப்பவர்கள் என நாட்டின் மொத்த வெளிநாட்டினரின் 1, 403, 409 என அனைவரும் இத்தடுப்பூசி திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here