வியாபாரிகளுக்கு கோவிட்-19 போர்ட்டிக்சன் பெரிய சந்தை 7 நாட்கள் மூடப்படும்!

க.கலை, போர்ட்டிக்சன் (ஜூன் 16) :- போர்ட்டிக்சன் பெரிய சந்தையில் வியாபாரம் செய்து வந்த இருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப் பட்டதைத் தொடர்ந்து அந்த சந்தையை கிருமிநாசினி தெளிப்பதற்கும் சுத்தம் செய்வதற்கும் 7 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக  தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான டத்தோ மு.ரவி கூறினார்.

டத்தோ மு.ரவி

    கடந்த வாரம் போர்ட்டிக்சன் பெரிய சந்தையில் வியாபாரம் செய்து வந்த இரண்டு நபர்களுக்கு  கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அதே சமயத்தில் அங்கு வியாபாரம் செய்து வரும் 18 பேர் அவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக நம்பப்படுவதால் அவர்களையும் நேற்று கோவிட் பரிசோதனைக்கு உட்பட்டதாக டத்தோ மு.ரவி கூறினார்.

    இதனிடையே கடந்த வாரம் போர்ட்டிக்சன் பெரிய சந்தைக்கு சென்று காய்கறிகள் மற்றும் மீன்களை வாங்கிய பொது மக்கள் உடனடியாக போர்ட்டிக்சன் அரசாங்க கிளினிக்கு சென்று தங்களை கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளுமாறு பொது மக்களை டத்தோ மு.ரவி கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here