பாகான் செராயிலுள்ள மோட்டார் சைக்கிள் பட்டறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆடவரின் சடலம்.

பாகான் செராய், ஜூலை 9:

பேராக் மாநிலத்தில் மஸ்ஜிட் திங்கி அருகே ஜாலான் பெர்செத்துவான் ஈப்போ-பட்டர்வொர்த் சாலை பகுதியில் அமைந்துள்ள ஓர் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் பட்டறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆடவர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

நேற்றிரவு சுமார் 9.30 மணியாகியும் தனது கணவரான டான் ஹொக் மெங் (60) தாமான் சினாரில் அமைந்துள்ள தமது வீட்டிற்கு திரும்பாததால் அவரது மனைவி கணவரின் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் பட்டறைக்குச் சென்று கணவரைத் தேடியுள்ளார்.

அவ்வேளை தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த கணவரைக் கண்டு அதிர்ந்து போனார். பின்னர் இவ்விடயம் தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு சவப்பரிசோதனைக்காக பாரிட் புந்தார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இது தொடர்பாக மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இறந்த நபர் நடத்திவந்த மோட்டார் சைக்கிள் கடை கடந்த மூன்று மாதங்களாக இயங்கவில்லை, அவர் தனது கடையை RM10,000 க்கு விற்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் பட்டறையில் காணப்படும் பொருட்களை ஒன்றுசேர்த்து இடம் மாற்றுவதற்கு சிறிது காலம் வேண்டும் என்றும் அப்பட்டறையை வாங்க முற்பட்டவரிடம் கேட்டிருந்தார் என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here