வைரலாகும் பேசும் படம்
பழம்பெரும் நடிகர் நாகேஷ் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை பற்றி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
சார்பட்டா பரம்பரைக்கும் இடியாப்ப பரம்பரைக்கும் இடையே நடக்கும் பாக்ஸிங் தொடர்பான கதை இது. 1970களில் நடப்பது போல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1970களில் வெளியான படம் ஒன்றில் பழம்பெரும் நடிகர் நாகேஷ், சார்பட்டா பரம்பரை பற்றி பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இரண்டு பெண்கள் நடுத்தெருவில் சண்டையிடும் போது அதற்கு கமெண்ட்ரி கொடுத்து, ஒருவர் சார்பட்டா பரம்பரை, மற்றவர் இடியாப்ப பரம்பரை என கூறுகிறார்.
இந்த சண்டையை உட்கார்ந்து வேடிக்கை பார்க்க 10 பைசா, நின்று கொண்டே பார்க்க 5 பைசா எனவும் டிக்கெட் போட்டு வசூலிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.