தடுப்பூசியை கட்டாயமாக்கியது பிரான்ஸ்; காலவரையறையின்றிய வேலை நிறுத்தத்தை அறிவித்தது அந்நாட்டு மருத்துவத்துறை

பிரான்ஸ் நாட்டில் மருத்துவதுறையினர் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் தெரிவித்த நிலையில், மருத்துவத்துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா வகை கொரோனா வைரஸ், பிரான்சில் தீவிரமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ள அனைவரும் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், வரும் செப்டம்பர் 15-ஆம் திகதியில் இருந்து மருத்துவ துறையினருக்கு கட்டாய தடுப்பூசி போடப்படும் என்றும், அப்படி அவர்கள் தடுப்பூசி போட தவறினால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர்கள் வேலை செய்யவும் அனுமதி மறுக்கப்படும் என்றும் அறிவித்தார். இதனால் இந்த நெருக்கடியை சமாளிக்க Marseille மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவத்துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

Sud Santé மற்றும் CGT unions ஆகிய இரு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 13.0000 ஊழியர்கள் வேலையை புறக்கணித்துள்ளனர். மேலும், அவர்கள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here