ஒற்றை தலைவலி பிரச்சனையை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்

ஒற்றைத் தலைவலிக்கு ஒரே தீர்வு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்து கொள்வது தான். உங்கள் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

ஒற்றைத் தலைவலி மிகவும் பொதுவான தலைவலி வகைகளில் ஒன்றாகும். ஒற்றைத் தலைவலி ஏற்படுவது நரம்பியல் பிரச்சினை என்றும் கூறுகின்றனர். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, பொதுவாக வாந்தி மற்றும் ஒலி மற்றும் கடுமையான வலி இருக்கும். ஒற்றைத் தலைவலி ஏற்பட்டதால் பல மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கும். கடுமையான வலியால் உங்கள் அன்றாட வாழ்க்கை முறைகள் பாதிக்கப்படுகிறது. 

ஒற்றைத் தலைவலிக்கு ஒரே தீர்வு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்து கொள்வது தான். உங்கள் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியம். என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

நட்ஸ் : மெக்னீசியம் நிறைந்த அனைத்து உணவுகளும் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. இதற்கு நட்ஸ் வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் முந்திரி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. உங்கள் அன்றாட உணவில் பாதம், முந்திரி, வால்நட் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

மூலிகை தேநீர் : பல்வேறு வகையான மூலிகை தேநீர் சுவையாக மட்டுமல்லாமல் பல நன்மை பயக்கும் பண்புகளையும் உள்ளடக்கியுள்ளது. புதினா, இஞ்சி, துளசி போன்ற மூலிகைகளை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த மூலிகை தேநீர் தலைவலியை சரி செய்ய உதவுகிறது. அதேபோல மிளகுக்கீரை தேநீர் சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது, மேலும் தலைவலியையும் குணப்படுத்துகிறது.

தயிர் : பல நேரங்களில் ஒற்றைத் தலைவலி காஸ்ட்ரோனமிக் பிரச்சினைகளால் ஏற்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம், இதனால் தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தயிர் ஒற்றை தலைவலியை சரி செய்வது மட்டுமின்றி நீரிழப்பை கட்டுப்படுத்துவதிலும் ஒரு வரப்பிரசாதமாக செயல்படுகிறது. எனவே தலைவலி ஏற்பட்டால் தயிர்  சாப்பிடலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் : பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடுவதால் நமது உடலுக்கு தேவையான அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. அனைத்து வகையான நோய்கள் மற்றும் வலிகளை எதிர்த்துப் போராட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எனவே கீரைகள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மீன் : மீனில் ஒமேகா 3 உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கடல் மீனில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் வாரம் இரண்டு முறை மீன் சாப்பிடலாம். கடல் உணவுப் பொருட்களில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால், மீன் மட்டுமின்றி இறால், நண்டு ஆகியற்றையும் சாப்பிடலாம். இதனால் வீக்கம், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here