ஜோகூர் போலீஸ் தலைவர் போன்று மாறுவேடமிட்டு ஏமாற்றுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கோலாலம்பூர்: மோசடி செய்யும் நோக்கத்திற்காக சிலர் ஜோகூர் போலீஸ் தலைவர் என்று கூறி ஆள்மாறாட்டம் செய்துவருவதாக ஜோகூர் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

சமீபத்தில் பல தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது ஜோகூர் போலீசாரால் கண்டறியப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் தொலைபேசி எண்கள் 016-4818565 மற்றும் 010-8368223 என்றும் அவர் கூறினார்.

“ஜோகூர் போலீஸ் தலைவராக மாறுவேடமிட்டவரை எந்தவொரு நபரும் எளிதில் ஏமாறக்கூடாது என்பதற்காக, அனைத்து பொதுமக்களுக்கும் இதனை தெரியப்படுத்துவதாக” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

மேலும் இது குறித்து, அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அல்லது ஜோகூர் கட்டுப்பாட்டு மையத்தை 07-2254047 எண்ணில் அல்லது ஒரு சிறப்பு அதிகாரியை 013-9058124 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here