முதல் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் அறை கோத்தா பாரு தடுப்பூசி மையத்தில் அறிமுகம்

கோத்தா பாரு: கோவிட் -19 க்கு எதிரான நடவடிக்கையாக, இஸ்தானா பாலை பெசார் தடுப்பூசி மையத்தில் (PPV) ஒரு தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் அறை நிறுவப்பட்டுள்ளது.

முதன் முதலாக இந்த தானியங்கி இயந்திரம் கிளந்தானின் கோத்தா பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம், இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டது, சுமார் 600 கிலோ எடையுள்ள இயந்திரம், முகமட் நூர் இன்சான் முகமட் நூர் மற்றும் முகமட் ஜெய்லானி முகமட் நூர் ஆகிய இரு தீயணைப்பு வீரர்களாலும் கையாளப்பட்டது.

நூர் இன்சான் இது தொடர்பில் கருத்துரைத்த போது, இந்த அறை தலை முதல் கால் வரையான முழு உடல் சுத்திகரிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

“அறை தானாகவே சென்சார்கள் மூலம் இயங்குகிறது மற்றும் இந்த PPV- க்குள் நுழைபவர்கள் தங்களை சுத்தமாக வைத்திருக்க இந்த அறையை கடந்து செல்ல வேண்டும் என்றார்.

மேலும் “இது நேரத்தையும் மனிதவளத்தையும் மிச்சப்படுத்துவதுடன், இது பொதுமக்களிடையே தொற்று அபாயத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

இந்த அறையை முதன்முதலில் பயன்படுத்தியது இஸ்தானா பாலாய் பெசாரில் உள்ள தடுப்பூசி மையமே என்று ஜெய்லானி கூறினார்.

“நாங்கள் ஒரு நாளைக்கு அறைக்கு 10 லிட்டருக்கும் அதிகமான ரீஃபில் சானிடைசரைப் பயன்படுத்துகிறோம், கோவிட் -19 உடன் போராடுவதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கு உதவ முடியும்” என்று ஜெய்லானி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here