பள்ளி பேருந்தின் வர்ண விஷயத்தில் தவறான விதிகளை முன்வைக்க வேண்டாம்; லிம் குவான் எங்கை சாடினார் போக்குவரத்து அமைச்சர்

கோலாலம்பூர்: பள்ளி பேருந்துகள், பம்பர்களின் உட்புறத்தை நீல வண்ணம் பூச வேண்டும் என்ற புதிய விதியின் கூற்றுகளை போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது.

தற்போதுள்ள விதிமுறைகள் 34 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் பள்ளிப் பேருந்து நடத்துனர்கள் அல்லது அதிகார தரப்பினரால் பேருந்து மற்றும் பம்பர்களின் உட்புறத்தில் நீல வண்ணம் பூசுமாறு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

DAP பொதுச்செயலாளர் லிம் குவான் எங் பள்ளி பேருந்து நடத்துனர்களிடமிருந்து புகார்கள் வந்ததாகக் கூறி, பம்பர்களின் உட்புறத்திற்கான வண்ணப்பூச்சில் அதிகாரிகள் புதிய விதிகளை வெளியிட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக போக்குவரத்து அமைச்சர் லிம் கருத்து கூறுகையில், அத்தகைய நடவடிக்கை ஆபரேட்டர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்பதோடு அது சுமையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

லிம்மின் கூற்றுகளை மறுத்த போக்குவரத்து அமைச்சர், தற்போது இருக்கும் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் இருப்பதாக கூறினார்.

மேலும் “சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) பள்ளி பேருந்து (நிறங்கள் மற்றும் அடையாளங்கள்) விதிமுறைகள் 1987 இல் எந்த திருத்தங்களையும் செய்யவில்லை,” என்றும் அவர் கூறினார்.

“இந்த விதிகளின்படி, அனைத்து பள்ளி பேருந்துகளிலும் “BAS SEKOLA”என்ற வார்த்தைகள் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட வேண்டும்.”

ஆதாரமில்லாமல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று போக்குவரத்து அமைச்சர் லிம்மை வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here