குடும்பத்திற்கு உணவளிப்பதற்காக திருடிய நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு, 3 மாதங்களுக்கு சமூகப்பணி செய்ய வலியுறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு

கோத்தா கினாபாலு: தனது குடும்பத்திற்கு உணவளிப்பதற்காக திருட்டை மேற்கொண்ட நான்கு குழந்தைகளின் தந்தைக்கு மூன்று மாதங்களுக்கு கட்டாய வருகை உத்தரவு (CAO) வழங்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் லவ்லி நடாஷா சார்லஸ் முன்னிலையில் , ஹஸ்வான் நிஜாம் அஹமட் (31) எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரே நீதிபதி இத்தீர்ப்புக்கு உத்தரவிட்டார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று மாத காலப்பகுதியில் அவர் ஒவ்வொரு நாளும் நான்கு மணிநேரம் CAO செய்ய வேண்டும்.

CAO ஐ நிறைவேற்ற தவறினால் ஹஸ்வான் நான்கு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளிகளின் கட்டாய வருகை சட்டம் 1954 இன் கீழ் அவருக்கு CAO வழங்கப்பட்டது. சமூகத்திலுள்ளவர்களின் வாழ்க்கையை பாதிக்காமல், குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது சிறைக்கு மாற்றானதாகும்.

குற்றஞ்சாட்டப்பட்டவரான ஹஸ்வான் பல பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டார், அதாவது காரிலிருந்த மூன்று டயர் , இரண்டு வெஸ்கா டயர் வால்வுகள் மற்றும் ஏழு ஏர்ஜெட் போல்ட் என்பவற்றை செப்டம்பர் 30 அன்று மாலை 4.30 மணியளவில் சென்ட்ரல் ஷாப்பிங் பிளாசாவில் உள்ள Mr.D.I.Y கடையில் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

இது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 380 ன் கீழ் குற்றம் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழி செய்யும்.

வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் பொருட்களை எடுத்து பணம் செலுத்தாமல் சென்றுவிட்டார் என்பதை அந்தக்கடையின் ஊழியர்கள் பார்த்தனர். திருடப்பட்ட பொருட்களின் இழப்பு தொகை சுமார் 62.35 வெள்ளி ஆகும்.

விசாரணையின் போது, ​​ஹஸ்வானை பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய சட்ட உதவி அறக்கட்டளை ஆலோசகர் லிம் மிங் சூங் @ லாரன்ஸ், குற்றவாளி குற்றத்தை ஏற்றுக்கொண்டதுடன் அதற்காக மன்னிப்பு கேட்டு, நீதிமன்றத்திடம் விண்ணப்பித்தார், ஒரு ரன்னராக பணிபுரியும் குற்றம்சாட்டப்பட்டவர் ஒருவரே நான்கு பிள்ளைகள் கொண்ட அந்த குடும்பத்தின் ஒரே ஆதாரம் என்று கூறினார்.

எதற்காக பொருட்களை திருடினீர்கள் என்று நீதிமன்றம் கேட்டபோது, ​​கண்ணீருடன் இருந்த குற்றவாளி, தனது குடும்பத்திற்கு உணவளிக்க ஆசைப்படுவதாகவும், இரண்டு மாத வீட்டு வாடகை நிலுவையாக இருந்ததாகவும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு பாடமாக போதுமான தண்டனையை வழங்குமாறு அரசு தரப்பு வலியுறுத்தியது அதன் அடிப்படையிலேயே அவருக்கு இத்தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here