நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தமாக 21,447 பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

கோலாலம்பூர்: கோவிட்நவ் போர்ட்டலின் நேற்று இரவு 11.59 மணி நிலவரப்படி, நாட்டில் 93.8 விழுக்காடு பெரியவர்கள் மற்றும் 25.6 விழுக்காடு இளம்பருவத்தினருக்கும் கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதில் தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டும் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 22,767,241 பேராகும். இது மக்கள்தொகையின் மொத்த தடுப்பூசி விகிதத்தை 69.7 விழுக்காடாக கொண்டு வருகிறது.

நாட்டில் மக்கள்தொகையில் 97.1 விழுக்காடு பெரியவர்கள் மற்றும் 78.2 விழுக்காடு இளையவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 2,441,276 நபர்களை உள்ளடக்கிய ஒற்றை டோஸ் தடுப்பூசி பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையை 77.2 விழுக்கடாக கொண்டு வருகிறது.

கோவிட் நவ் போர்ட்டலின் கோவிட் -19 தடுப்பூசி கண்காணிப்பின் கூற்றுப்படி, இருவரை மொத்தம் 21,447 பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் சரவாக்கில் மட்டும் 10,418 பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இது கோவிட் -19 தடுப்பூசிகளின் மொத்த அளவுகளில் ஏறக்குறைய பாதி அளவாகும்.

கோவிட் -19 தேசிய நோய்த்தடுப்பு திட்டம் (NIP) 236 நாட்களுக்கு முன்பு தொடங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம் 47,838,886 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த போர்டல் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here