கோலாலம்பூரில் இன்று பிற்பகல் முதல் பெய்த கனமழையால் தலைநகரைச் சுற்றியுள்ள பிரதான சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கோலாலம்பூர் மாநகர மன்ற போக்குவரத்து மேலாண்மை மையம் (ஐடிஐஎஸ்) முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாமேரு நெடுஞ்சாலை, ஜாலான் கிள்ளான், ஜாலான் கெந்திங் கிள்ளான், ஜாலான் இஸ்தானா, ஜாலான் கினாபாலு மற்றும் ஜாலான் கூச்சிங் ஆகிய வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், புக்கிட் ஜாலீல் நெடுஞ்சாலையில் ஒரே ஒரு பாதை மட்டும் திறக்கப்பட்டபோது நெரிசலை ஏற்படுத்திய ரவுண்டானாவை நோக்கி ஆஸ்ட்ரோவுக்கு முன்னால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோலாலம்பூர்- சிரம்பான் நெடுஞ்சாலையிலும் இதே நிலை ஏற்பட்டது. புக்கிட் ஜாலில் ஓரத்தில் தண்ணீர் தேங்கி, ஒரு பக்க பாதையை மட்டுமே வாகனங்கள் கடந்து செல்ல முடிந்தது. Bulatan Lumba Kuda பாதையில் ஒரு மரம் விழுந்ததால் இடது பாதை தடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.





















