ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,400 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி; 1, 190 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவிட் -19 தொற்றினால் 1,190 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் புதிதாக அங்கு 39,400 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் கோவிட் -19 தொற்றினால் பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 88,34,495-ஆக உயா்ந்துள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,982 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here