பூலாவ் தலாங்கில் மூன்று மீனவர்களைக் காணவில்லை; தேடும் பணி தொடர்கிறது

லுமூட், நவம்பர் 14 :

பந்தாய் ரெமிஸ், பூலாவ் தலாங் பகுதியில் நேற்று இரவு படகு கவிழ்ந்ததில் மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

பேராக் மலேசிய கடல்சார் அமலாக்க துறையின் (MMEA) இயக்குநர் கேப்டன் ஷஹ்ரிசான் ராமன் கூறுகையில், காணாமல்போன மீனவர்கள் மூவரும் 29 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள்.

லங்காவியின் கடல்சார் மீட்பு துணை மையம் (MRSC) மூலம் தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஷாஹ்ரிசான் கூறினார்.

“தகவல் கிடைக்கப்பெற்றதும் தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது. இதற்கு உதவும் வகையில் MMEA பெர்காசா 1223 மற்றும் கிலாட் 11 ஆகிய இயந்திரங்களையும் அனுப்பியுள்ளது என்றார்.

“ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, படகு மூழ்கப் போவதாகத் தெரிவித்தார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பந்தாய் ரெமிஸ் படகுத்துறையின் தகவலின்படி, படகு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், MMEA தேடுதல் பகுதியை 42.30 சதுர கடல் மைல்களாக விரிவுபடுத்தியுள்ளதாகவும் ஷாஹ்ரிசான் கூறினார்.

“இந்த தகவல் லுமுட்மேற்கு கடற்படை கட்டளை தலைமையகம், கம்போங் ஆச்சே கடல்சார் போலீஸ் படை மற்றும் கடல்சார் செயல்பாட்டுத் தளபதி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டது.

“கடலில் 1.0 முதல் 2.7 மீட்டர் அலை உயரத்துடன் கூடிய கடல் நிலை மற்றும் சீரற்ற வானிலை ஆகியவை இந்த SAR நடவடிக்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகும்” என்று அவர் கூறினார்.

இன்று இரவு 7.30 மணி வரை இந்த மீட்பு நடவடிக்கை தொடரும் என்றும் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நாளை காலை 7 மணி முதல் மீண்டும் மீட்பு நடவடிக்கை தொடரும் என்றும் ஷாஹ்ரிசான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here