கோவிட்-19: மலேசியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான இளம் பருவத்தினர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) நிலவரப்படி மொத்தம் 2,589,925 நபர்கள் அல்லது நாட்டின் இளம் பருவத்தினரில் 82.3% பேர் கோவிட்-19 தடுப்பூசியை முடித்துவிட்டனர். CovidNow இணையதளம் மூலம் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், 2,755,745 தனிநபர்கள் அல்லது 87.6% இளம் பருவத்தினர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர்.

18 வயதிற்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை 95.6% அல்லது 22,390,580 நபர்கள் தங்கள் தடுப்பூசியை முடித்துள்ளனர், மேலும் 97.8 % பேர் அல்லது 22,914,289 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 36,028 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன. 2,244 பேர் முதல் டோஸையும், 4,325 பேருக்கு இரண்டாவது டோஸையும், 29,459 பேர் பூஸ்டர் டோஸையும் பெற்றனர். இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICK) கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசி அளவுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 8,61,93 ஆகக் கொண்டு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here