கொலை வழக்கு சம்பந்தமாக தந்தை,மகன், உறவினர் என மூவருக்கு தடுப்புக்காவல்

ஈப்போவிலுள்ள Pasar Pagi Flat Ashby நேற்று நடந்த சண்டையின் போது ஒரு நபர் இறந்தது தொடர்பாக ஒரு வியாபாரி மற்றும் அவரது தந்தை உட்பட மூன்று பேர் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 34 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட மூவருக்கும் எதிரான விளக்கமறியல் உத்தரவு நீதவான் நூர் அஸ்ரீன் லியானா மொஹமட் தரூஸினால் வழங்கப்பட்டது.

நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கையடக்க ஒலிபெருக்கி திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மூவருடன் ஏற்பட்ட சண்டையின் போது முஹம்மது நூர் ஃபகிஹ் மொஹமட் ஆரிஃபின், 29, என்பவர் மூச்சுத் திணறிக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here