கோலாலம்பூர், பேராக், பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய நகரங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று தொடர்ந்து கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அதிகாலை 1.40 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை எச்சரிக்கையின் மூலம் பேராக் சம்பந்தப்பட்ட பகுதிகள் மஞ்சோங், கிந்தா, கம்பார், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், படாங் மற்றும் முஅல்லிம் மற்றும் ஹுலு பேராக் என்று தெரிவித்தது.
பகாங்கில், கேமரன் ஹைலேண்ட்ஸ், லாபிஸ், ரவூப், ஜெரான்ட், பென்டாங் குவாந்தன், தெமர்லோ, மாரான், பெக்கான், பேரா மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். சிலாங்கூரில், சாபா பெர்னாம், கோல சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோல லங்காட் மற்றும் ஹுலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய இடங்களில் சீரற்ற வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெடாவில் கோல மூடா, கூலிம், பண்டார் பாரு, லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார் , போகக் சேனா, பாடாங் தெராப், யான், பென்டாங், சிக் மற்றும் பாலிங் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலானில், மோசமான வானிலை சிரம்பான், போர்ட்டிக்சன், கோல பிலா, ரெம்பாவ், ஜெலேபு, ஜெம்போல் ஆகிய பகுதிகளும் ஜோகூரில் உள்ளவை தங்காக், செகாமட், மூவார் மற்றும் பத்து பகாட் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்படும்.
மெட்மலேசியா பெர்லிஸ் முழுவதும் தொடர்ச்சியான மழை எச்சரிக்கையை வெளியிட்டது; கிளந்தான் (தும்பட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசீர் புத்தே மற்றும் கோல க்ராய்). இதேபோன்ற வானிலை தெரெங்கானு மற்றும் மலாக்கா முழுவதும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















