வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கான நடமாடும் இலவச மருத்துவ சேவை; இன்று முதல் டிசம்பர் 27 வரை நடைபெறும்

கோலாலம்பூர், டிசம்பர் 21 :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்க, மலேசிய கால்நடை மருத்துவ சங்கம் (MAVMA) மற்றும் மலேசிய சிறு விலங்கு கால்நடை மருத்துவ சங்கம் (MSAVA) ஆகியவை இணைந்து இந்த சேவையில் ஈடுபட்டுள்ளது.

மலேசிய புத்ரா பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் ஃபரினா முஸ்தபா கமால் இதுபற்றிக் கூறுகையில், இந்த பணி இன்று தொடங்கி டிசம்பர் 27 வரை நடைபெறும் என்றார்.

ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடா அருகே வெள்ளம் அதிகம் பாதித்த பகுதியில் இந்த நடமாடும் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்றும், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும் அவர் கூறினார்.

“பொதுமக்கள் தங்கள் சொந்த செல்லப்பிராணிகளையோ அல்லது தெருவிலங்குகளையோ நடமாடும் மருத்துவ மனைக்கு அழைத்து வரலாம். நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு உரிமம் பெற்ற கால்நடை மருத்துவர்கள் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

“இந்த முயற்சி பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் கிளினிக்குகளின் கால்நடை மருத்துவர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுள்ளது, மேலும் நாங்கள் விலங்கு உணவு மற்றும் பிற மருத்துவ கருவிகளையும் விநியோகிப்போம் என்றார்.

“நடமாடும் கிளினிக் தாமான் ஸ்ரீ மூடா KFC/Pizza Hut வாகன நிறுத்துமிடப் பகுதியில் உள்ளன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பல விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொண்ட டாக்டர் ஃபரினா, அதற்கேற்ப இந்த பணி அவர்களுக்கு உதவும் என்று நம்புகிறார்.

“வெள்ளம் இருந்தபோதிலும், விலங்குகளும் சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது” என்று மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here