லங்காவிக்கு மோட்டார் சைக்கிள் தொடரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக 473 சம்மன்கள் வழங்கப்பட்டன

லங்காவி, டிசம்பர் 31 :

நேற்று நண்பகல் மற்றும் நேற்றிரவு இங்குள்ள தஞ்சோங் லெம்புங் வார்ஃப் வழியாக ரிசார்ட் தீவுக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக மலேசிய காவல்துறையினர் (பிடிஆர்எம்) மொத்தம் 473 சம்மன்களை வழங்கினர்.

லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி இதுபற்றிக் கூறுகையில் , மொத்தம் 1,200 மோட்டார் சைக்கிள்களை சாலைப் போக்குவரத்துத் துறையும் (ஜேபிஜே) காவல்துறையும் இணைந்து ஆய்வு செய்ததாகக் கூறினார்.

“அவர்கள் மூன்று குழுக்களாக, வாகனப் படகுச் சேவைகள் மூலம் கோல பெர்லிஸிலிருந்து தஞ்சோங் லெம்புங் படகுத்துறை, லங்காவிக்கு நேற்று மாலை 5 மணிக்கும், அதைத் தொடர்ந்து  இரவு 9 மற்றும் 11 மணிக்கும் வந்தனர்.

“ஆய்வின் விளைவாக, 473 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக காவல்துறையினரால் சம்மன்கள் வழங்கப்பட்டன, அத்தோடு அவை 606  போக்குவரத்து குற்றங்கள் சம்பந்தப்பட்ட குறிப்பாக பதிவு எண்கள் மற்றும் பக்க கண்ணாடிகள் இல்லாமல் பெரும்பான்மையான மோட்டார் வண்டிகள் இருந்தன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஷரிமான் கூறுகையில், அதே நடவடிக்கையின் போது, ​​ஜேபிஜே பல்வேறு குற்றங்களுக்காக 104 அபராதங்களையும் வெளியிட்டது அத்துடன் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தது.

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு, திரெங்கானு, கிளந்தான் மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்ததாக அவர் கூறினார்.

“மோட்டார் சைக்கிளில் பதிவு எண் இல்லை என்பது மட்டுமல்லாமல், அதற்குப் பதிலாக ‘லங்காவி அட்டாக் #ஜேபி_மாரி’ என்ற வார்த்தையும் காணப்பட்டது.

“அனைத்து ரைடர்களும் லங்காவி தீவில் இருக்கும்போது சாலையின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று நினைவூட்டப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

நேற்றிரவு தொடக்கம், பல காணொளிகள் தீவில் புத்தாண்டைக் கொண்டாடுவதாக நம்பப்படும் வாகனத் தொடரணியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் உற்சாகமாக சென்றதை காட்டின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here