சம்மன் வழங்கும்போது அச்சுறுத்தல் – அமைதியாக இருந்த நகராண்மை கழக அதிகாரிக்கு பாராட்டு

கோலசிலாங்கூர் நகராண்மை கழக  (MPKS) அதிகாரி ஒருவர் போக்குவரத்து சம்மன்களை வழங்கும்போது அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமைதியாக இருந்ததற்காக (exco member)  உச்சமன்ற உறுப்பினர் Ng Sze Han அவர்களால் பாராட்டப்பட்டார்.

இணையவாசியான இஸ்ஸான் ரஷீத் பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ, நேற்று வைரலாக பரவி, பொதுமக்களில் ஒருவர் கத்தி, அதிகாரியை வன்முறையில் மிரட்டுவது போன்ற காட்சிகள் வெளியாகின.

காணொளியில் உள்ள MPKS அதிகாரியை நான் வாழ்த்த விரும்புகிறேன், அவர் நிலைமையை அமைதியாகக் கையாண்டார். அவர் பதிலடி கொடுக்கவில்லை. அது ஒரு நல்ல உதாரணம். ஆனால், இந்த வகையான நடவடிக்கை – பொது ஊழியர்களின் பொதுக் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பது – சட்டத்திற்கு எதிரானது என்பதை நான் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here