பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 6 :
மலேசியாவில் இதுவரை கோவிட் -19 ஓமிக்ரான் மாறுபாட்டின் மொத்தம் 245 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதுபற்றிக் கூறுகையில்,மொத்தம் 245 தொற்றுக்களில் 233 தொற்றுக்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் பதிவானதாகவும், மீதி 12 உள்ளூர் பரவல்கள் என்றும் கூறினார்.
“உம்ரா சென்று திரும்பியவர்களில் மொத்தம் 157 பேர் ஓமிக்ரான் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்,” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஜனவரி 8 முதல் அனைத்து உம்ரா பயணங்களையும் இடைநிறுத்துவது குறித்த அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்பினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் அது ஒரு மாதத்திற்கு மட்டுமே இருக்கும் என்றும் கைரி சுட்டிக்காட்டினார்.