வெள்ளிக்கிழமை தொழுகைக்கான புதிய விதிகள் ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் என்கிறது சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை

ஷா ஆலம், ஜனவரி 18 :

சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை (JAIS) சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இத்ரிஸின் ஒப்புதலைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்துவதற்கான அனுமதியைப் பெறும் அனைத்து மசூதிகள் மற்றும் சூராவில் உள்ள முக்கிய தொழுகை பகுதி மற்றும் பிற தொழுகை இடங்களை முழுமையாகப் பயன்படுத்த அனுமதித்துள்ளது.

சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ஷாஜிஹான் அஹ்மட் இதுபற்றிக் கூறுகையில், சிலாங்கூர் சுல்தானும் தொழுபவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் தனிநபர் இடைவெளியை அமைக்க ஒப்புக்கொண்டதாக கூறினார்.

“சிலாங்கூர் சுல்தானின் சமீபத்திய ஒப்புதலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து மசூதிகள் மற்றும் சூராவுக்கு விரைவில் கடிதம் விநியோகிக்கப்படும், அத்தோடு 2022 ஜனவரி 21 முதல் இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்படும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்ற அனுமதி பெற்ற மொத்தம் 427 மசூதிகள் மற்றும் 316 சூராவ்கள் இந்த விதிகளை பின்பற்றும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here