வீட்டுத் தனிமைப்படுத்தலில் பினாங்கு முதல்வர்

ஜார்ஜ் டவுன், ஜனவரி 24 :

சனிக்கிழமையன்று நடந்த ஒரு நிகழ்வின் போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக. பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முதல்வர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மாநில சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, பினாங்கு முதல்வர் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று கூறியது.

நாளை (ஜனவரி 25) தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் மூன்றாவது நாளில் RT-PCR சோதனையை எடுக்குமாறு மாநில சுகாதாரத் துறை சோவுக்கு பணித்துள்ளது.

தொற்று பரவுவதைத் தடுக்க மாநில சுகாதாரத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும்
சம்பந்தப்பட்டவர்கள் அவ்வப்போது மாநில சுகாதாரத் துறையால் அடுத்த நடவடிக்கைக்காக தொடர்பு கொள்ளப்படுவார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் RTK ஆன்டிஜென் சோதனைகள் முதலாம் மற்றும் 2ஆம் நாளில் எதிர்மறையாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here