இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 45 கைத்துப்பாக்கிகளுடன் இரு இந்தியர்கள் கைது

புதுடெல்லி, ஜூலை 16 :

நேற்று, இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 45 கைத்துப்பாக்கிகளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜக்ஜிட் சிங் மற்றும் ஜஸ்விந்தர் கவுர் என்ற தம்பதியினர், ஜூலை 10 ஆம் தேதி வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து இந்தியா வந்ததாக சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜக்ஜிட்டின் சகோதரர் மஞ்சிட் சிங் கொடுத்ததாகக் கூறப்படும் இரண்டு தள்ளுவண்டிப் பைகளில் கைத்துப்பாக்கியுடன் அவர்கள் பிடிபட்டதாக அவர் கூறினார்.

பிரான்சின் பாரிஸிலிருந்து வியட்நாமில் தரையிறங்கிய பிறகு, மன்ஜிட் தனது சகோதரனான ஜக்ஜிட்டிடம் பையை கொடுத்ததாக கூறப்படுகிறது.

“பையை ஒப்படைத்த பிறகு, மஞ்சிட் வியட்நாம் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்,” என்று அவர் NDTV போர்டல் மூலம் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“அவர்கள் எடுத்துச் சென்ற இரண்டு தள்ளுவண்டிப் பைகளில் மேலும் ஆய்வு செய்யப்பட்டதில், பல்வேறு பிராண்டுகளின் 45 கைத்துப்பாக்கிகள் இருந்தன, அதன் மதிப்பு சுமார் 22.5 லட்சம் (சுமார் RM125,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் மேலும் கூறுகையில், ஆயுதம் உண்மையானதா, இல்லையா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

“முதற்கட்ட அறிக்கையில், வழக்கை விசாரித்த தேசிய பாதுகாப்புப் படையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, ஆயுதம் முழுவதுமாக செயல்பட்டதை உறுதிப்படுத்தியது,” என்று பிடிஐ செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here