பொதுத்தேர்தல் 15 இல் இந்தியர்கள் நிலை என்ன?

கோலாலம்பூர், மார்ச் 13-

அடுத்த என்பது நாட்டின் பொதுத்தேர்தலைக்குறிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
அரசியல்பேசப்படுமானால் அடுத்த பொதுத்தேர்தல் பற்றியதாகத்தான் இருக்கும். என்பத்ற்கு ஓர் அடையாளத்தை துன் டாக்டர் மகாதீர் முகமது கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு என்றால் மிகையில்லை.

அண்மைய இழுபறியில் இவர் சற்றே சறுக்கிவிட்டார் என்பதல் வலுவிழந்துவிட்டார், எடுபடவில்லை என்பதாகக் கருதுவிட முடியாது. யானை படுத்தாலும் ஆயிரம்போன் என்று தான் கூறுவதைப்போல் இன்னும் அவருக்கான மதிப்பு உயர்வாகவே இருக்கிறது.
இந்த மதிப்பை துன் மகாதீர் தாமே உயர்த்திக்கொள்ளவில்லை. அது அவருக்கானது. அதை யாரும் மீட்டுக்கொள்ள முடியாது.

இவர் சொல்வது சரியாக இருக்குமா என்பதை கொஞ்சம் உரசிப்பார்க்கவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பது சரியானதுதானா?

இந்தியர்கள், சீனர்களின் ஆதரவு கிடைக்காது என்று கூறியிருக்கிறார். இப்படிக் கூறுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

முதுகிலே குத்தி வீழ்த்திவிட்டதற்காக அல்ல இந்த வார்த்தை. வீழ்ந்துவிடவும் இல்லை இடரப்பட்ட இடைவெளியில் இருக்கையை அபகரித்துக்கொண்டதின் வேதனையும் அல்ல.

மாற்றம் செய்யப்படுவதை மக்கள் எப்படி ஏற்கிறார்கள் என்பதும் முக்கியமாக கருத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

கடந்த 14ஆவது மாற்றத்தை மீள்பார்வை பார்த்தால் சில உண்மைகள் புரியும். நான் பிரதமரானதில் யாருக்கும் வருத்தம் இருந்ததில்லை . அது காலத்தின் கட்டாயம். ஆனால், அமைச்சரவையில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் உரிய இருக்கைகல் கொடுக்கப்பட்டன என்பதில் மன நிறைவு இருந்தது.

அந்த மன நிறைவு பூகம்ப மாற்றைத்தில் இல்லாமல் போனது இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இல்லாமல் போய்விட்டது.

குறிப்பாக. அமிக அதிகமான மலாய்க்காரர்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர் என்பதில் திருப்பதி மொட்டையாகவே இருக்கிறது.

இப்படித்தான் இந்திய சமுதாயம் கருதுகிறது. இங்கு கமுக்கம் சொல்லாட்சி செய்கிறது. கடந்த தேர்தலிலும் கமுக்கம் தன் வேலையை செய்திருக்கிறது. அதனால்தான் ஆட்சி மாற்றம் நடந்தது. கைப்பேசிகள் காரணமாக இருந்தன. ஒத்துழைத்தன் சுடான செய்திகள் பரிமாறப்பட்டன.

வரும் 15 ஆவது தேர்தலிலும் இந்த வித்தை கையாளப்படுவதை யாரும் தடுக்கவே முடியாது என்ற தோற்றத்தைக் கூறுகிறார் துன் டாக்டர் மகாதீர் முகமது.

  • இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here