தைவானுக்கு சென்றார் அமெரிக்க சபாநாயகர் – தைவான் வானில் வட்டமிடும் 21 சீன போர் விமானங்கள்

தைவான், ஆகஸ்ட் 3 :

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தைவான் வான் எல்லைக்குள் புகுந்து 21 சீன போர் விமானங்கள் வட்டமிட்டு வருகின்றன.

கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு வந்தாலும் சீனா அதற்கு உரிமைகோரி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

அமெரிக்க சபாநாயகரின் இந்த ஆசிய பயணத்தில் தைவானும் இடம்பெற்று இருந்தது சீனாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. நான்சி பெலோசி தைவான் வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் கண்டனம் தெரிவித்தார்.

“நான்சி பொலோசி தைவான் வருவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுபவர்கள் சாம்பலாகி போவது உறுதி.” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஜீ ஜின்பிங்கின் எதிர்ப்பை தொடர்ந்து நான்சி பெலோசி தைவான் செல்வாரா? அல்லது பின்வாங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவியது.

தைவானில் பெலோசி இந்த நிலையில் தனது பயணத்திலும் பின்வாங்காமல் அவர் தைவானுக்கு இன்று இரவு 8:15 மணியளவில் சென்றடைந்து இருக்கிறார். தைவான் சென்ற அவரை அந்நாட்டு அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

தைவான் தலைநகர் தைபே சென்றடைந்த அவருக்கு அந்நாடு ராணுவ பாதுகாப்பை அளித்து வருகிறது. அதிபருடன் சந்திப்பு நான்சி பெலோசிக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 13 அமெரிக்க போர் விமானங்கள் ஜப்பானிலிருந்து தைவானின் தைப்பே நகருக்கு சென்றடைந்து உள்ளன. தலைநகர் தைபேவில் உள்ள கிராண்ட் ஹைத் விடுதியில் அவரை தங்க வைக்கப்பட்டு இருக்கிறார். நாளை தைவான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் நான்சி சந்திக்க இருக்கிறார்.

போர் விமானங்கள் இதுகுறித்து சீன பாதுகாப்புத்துறை தெரிவிக்கையில், “சீன ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. திட்டமிட்ட ராணுவ நடவடிக்கைகளை எடுப்போம். சீனாவின் பாதுகாப்பு படை இன்று இரவு கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். தைவானின் கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த உள்ளோம்.” என்று அறிவித்தது.

இந்த நிலையில் தைவானின் வான் எல்லையில் 21 சீன போர் விமானங்கள் புகுந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here