கொழும்பு, செப்டம்பர் 1:
1948 இல் பிரிட்டனிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
இலங்கையர்கள் பல மாதங்களாக எரிபொருள் மற்றும் பிற அடிப்படைப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர், இது அரசியல் கொந்தளிப்பு மற்றும் பணவீக்கத்தின் காரணமாக இப்போது கிட்டத்தட்ட 65% ஆக உயர்ந்துள்ளது.
இந்த மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில், கடன் சுமையில் உள்ள இலங்கை உலகளாவிய கடன் வழங்குநரிடமிருந்து உதவி கோரியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24-ந்தேதி நடைபெற்றது.
இதனையடுத்து 2-ம் கட்டபேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அரசுடனான பேச்சுவார்த்தை இன்று நிறைவு பெற்றது.
இலங்கைக்கு 2.9 பில்லியன் டோலர் கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. கையறு நிலையிலுள்ள இலங்கைக்கு இந்த செய்தி மகிழ்ச்சியளிக்கும் வகையிலுள்ளத்தாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.