ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 6 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது குனார், லக்மன் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களிலும், தலைநகர் காபூலிலும் உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதிகாரியின் கூற்றுப்படி, மாகாணத்தின் பல பகுதிகளில் டஜன் கணக்கான குடியிருப்புகள் அழிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்திலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது குறிப்பாக இந்து குஷ் மலைத்தொடரில், இது யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகள் சந்திப்பிற்கு அருகில் உள்ளது. 2015 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இரு நாடுகளிலும் சுமார் 380 பேர் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய மாதங்களில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் சுமார் 200 பேரைக் கொன்றது. ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது. இத்தகைய பேரழிவுகள் ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here