ரியாத், செப்.28 :
சவுதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அரசாட்சியில் உள்ள அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நிறுவியுள்ளார்.
அதன்படி, சவுதி அரேபிய இளவரசராக முடி சூடிய முஹமட் பின் சல்மான் இனி சவுதியின் பிரதமர் ஆக பதவியில் நீடிப்பார். அதேபோன்று, இளவரசர் காலிட் பின் சல்மான் அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராகிறார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் துர்க்கி பின் முகமது பின் பஹத் பின் அப்துல்அஜீஸ் மாநில அமைச்சராகவும், இளவரசர் அப்துல்அஜீஸ் பின் துர்க்கி பின் பைசல் விளையாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். கல்வி அமைச்சராக யூசப் அல் பென்யான், ஆற்றல் துறை அமைச்சராக இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான், வெளிவிவகார அமைச்சராக இளவரசர் பைசல் பின் பர்ஹான் பதவி வகிப்பார்கள்.
இதனை தொடர்ந்து, முதலீட்டு அமைச்சராக காலிட் பின் அப்துல்அஜீஸ் அல் பாலி, உள்துறை அமைச்சராக இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சவுத் பின் நயீப் பின் அப்துல்அஜீஸ், நிதி அமைச்சராக முகமட் பின் அப்துல்லா அல் ஜடான் ஆகியோரும் பதவி வகிக்க உள்ளனர்.