விண்வெளி நிலையத்துக்கான ஆய்வுகூடத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

விண்வெளி நிலையத்துக்கான ஆய்வுகூடத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பீஜிங், சீனா விண்வெளியில் தனெக்கென புதிதாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. ‘தியான்ஹே’ என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் சூழற்சி முறையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக சீனா ஏற்கனவே வெண்டியன் என்கிற ஆய்வுகூட அமைப்பை அனுப்பியது. அந்த ஆய்வுகூட அமைப்பு ‘தியான்ஹே’ விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனான் கடற்கரையில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச் 5பி ஒய்4’ ராக்கெட் மூலம் மெங்டியன் ஆய்வுகூட அமைப்பு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஆய்வுகூட அமைப்பு நுண் புவியீர்ப்பு விசையை படிக்கவும், திரவ இயற்பியல், பொருள் அறிவியல், அடிப்படை இயற்பியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்வெளி நிலையத்துக்கான ஆய்வுகூடத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here