15ஆவது பொதுத்தேர்தலுக்கான தேசிய முன்னணியின் வாக்குறுதி சாராம்சங்கள்

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் அடுத்த வாரம் சனிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி நடத்தப்படவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தேர்தலில் தேசிய முன்னணி பலதரப்பட்ட அம்சங்களைப் பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் வாக்குறுதியைத் தயாரித்துள்ளது.

அந்த வாக்குறுதிகளின் சாராம்சங்கள் பின்வருமாறு:


1. 2,228 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானத்தைக் கொண்ட குடும்பத்திற்கு மாதந்தோறும் அடிப்படை வருவாய் உதவித்திட்டம்.

 

2. எம்40 பிரிவினர் 50,000 ரிங்கிட்டில் இருந்து 100,000 ரிங்கிட் வரையிலான வரி செலுத்தும் தரப்பினருக்கு 2 விழுக்காடு வரை கழிவு.

 

3. நாடு தழுவிய அளவில் 6, அதற்குக் கீழ்ப்பட்ட வயதுடைய சிறார்களுக்கு இலவங் தேசியக் கல்வி, பராமரிப்புச் செயல்பாடு.

 

 

4. மடிகணினியைப் பயன்படுத்தும் டெக்ஸ் புத்தகம் இல்லாத கற்றல் – கற்பித்தல் செயல்முறை, பி40 பிரிவினர் இதன் அடிப்படையில் இலவச மடிகணினி பெறுவர். இது தவிர 18 மாதங்களுக்கு நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் 5ஜி இணைய வசதி உறுதிப்படுத்தப்படும்.

 

5. பி40 பிரிவு பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி.

 

6. 50 விழுக்காடு கல்விக்கூட வளாகத்தில் கற்றல் -கற்பித்தல் நடவடிக்கை, 50 விழுக்காடு ஆன்லைன் அல்லது நெடுந்தூரக் கற்றல் – கற்பித்தல் என இருவகை கல்விமுறை.

 

7. தொழில்பயிற்சி மேற்கொள்ளும் உயர்கல்விக்கூட மாணவர்கள், மற்றவர்களுக்கு முதலாளிகள் அலாவன்ஸ் தொகை வழங்குவது கட்டாயமாக்கப்படுதல்.

8. முதியோர் பராமரிப்புச் சட்ட வரையறுப்பு, 5 ஆண்டுகளுக்கு 105 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் வழி மாற்றுத்திறனாளி, முதியோர் பராமரிப்பு மைய நிர்வாகத் தரப்பினரின் ஆற்றலையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்துதல்.

 

9. அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ், மாண்ட்ரின், ஈபான், கடாசான், இதர மொழிகள் அடிப்படைத் தொடர்பு மொழிப்பாடமாகப் போதிக்கப்படும். இது தவிர புத்தாக்கம் உள்ளிட்ட புதிய திறன் பாடமும் போதிக்கப்படும்.

 

10. நிர்வாக அளவில் பாலினம், இன ரீதியிலான ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு வரி சார்ந்த நலத்திட்டங்கள்.

11. பாலின சமச்சீர் பஞ்சாயத்து தோற்றுவிப்புக்கான ஏற்புடைமை தன்மைகளை ஆராய்தல், பாலியல் தொல்லைத் தடுப்பு ஆணையம் தோற்றுவித்தல்.

12. அந்நியப் பிரஜைகளைத் திருமணம் செய்துகொள்ளும் மலேசியப் பெண்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் பிள்ளைகளின் குடியுரிமை குறித்த சட்டவிதி மாற்றம்.

 


13. அரசியல் நிதி தொடர்பான சட்ட வரையறுப்பு.

 

14. மலேசிய ஊழல் தடுப்புத் தலைமை ஆணையர், தேர்தல் ஆணையத் தலைவர் போன்ற நாட்டின் முதன்மை பதவிகளுக்கான நியமனம் நாடாளுமன்றச் சிறப்புச் செயற்குழுப் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

15. நாட்டிலுள்ள முக்கியப் பதவிகளுக்கான நியமனத் தணிக்கையில் ஈடுபடுவதோடு அதனைப் பரிசீலனை செய்ய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் வாயிலாக மக்களுக்கு உரிமையளிக்கப்படுதல்.

 

16. அனைத்து ரக மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி பெர்மிட் அம்சங்கள் ஒழிப்பு.

 

17. மாநில அரசாங்கத்தின் கூட்டமைப்போடு வனப்பகுதிக்கான பரப்பளவு வரைவு 60 விழுக்காடு வரை உயர்த்தப்படுதல்.

 

 

18. நாட்டின் புதிய பொருளாதாரப் பெருமுகம், பாதுகாப்புத் தளமாக சபா – சரவாக் பிராந்தியத்தை உருவாக்குதல்.

 

 

19. இ-ஹெய்லிங் சேவையைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயணப் பற்றுச்சீட்டுக்கு ஆண்டிற்கு 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

 

 

20. நாட்டில் முதல் மகளிர் பொது மருத்துவமனையை உருவாக்குதல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here