பல வாக்குச் சாவடி மையங்களில் முந்தைய பொதுத் தேர்தலை விட வாக்காளர்கள் கூட்டம் குறைவாக உள்ளது என்கிறார் டாக்டர் வீ

யோங் பெங், நவம்பர் 19 :

நாட்டின் முந்தைய பொதுத் தேர்தலை விட, இன்று காலை பல வாக்குச் சாவடி மையங்களில் வாக்களிக்கும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது என்று MCA தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெருவுத்துள்ளார்.

வாக்குப்பதிவு நாளான இன்று காலை 6 மணி முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆயிர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளரான அவர் கூறினார்.

“இருப்பினும், வரிசை மற்றும் வாக்குப்பதிவின் போது செலவழித்த நேரத்தைப் பார்க்கும்போது, ​​இந்த நேரத்தில் கூட்டம் குறைவாகவே தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

“நேரம் செல்லச் செல்ல அதிகமானோர் வாக்களிக்க வருவார்கள் என்றும் மலேசியாவில் பொது விடுமுறை என்பதால் அவர்களில் சிலர் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டிருக்கலாம் என்று  நம்புகிறேன்” என்று இங்குள்ள SK யோங் பெங் தேசியப்பள்ளியில் வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக இன்று காலை 11 மணியளவில், டாக்டர் வீ மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ஜெசிகா லிம் ஹை ஈன் ஆகியோருடன் யோங் பெங் சட்டமன்ற உறுப்பினர் லிங் தியான் சூன் மற்றும் அவரது மனைவி தான் தின் தின் ஆகியோருடன் வாக்களித்தனர் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here